ஏன் ராசா
இன்னைக்குமா வேலை...
ஆமாம் புள்ள...
ஆரு தருவா சோறு..
இன்னைக்கு போனா ரெட்டை கூலியாம்..
அட்டை போடும் தொழிலாளி ஆதரவென்ன?!!!
உழைப்பாளர் தினம்
உண்ணாவிரத நாளா..
அன்றாடங்காய்ச்சிகளுக்குமா
கொண்டாட்டங்கள்..
காலண்டரில் மட்டும் இருக்கட்டும்..
சுரண்டல் முதலாளிகள் இருக்கும்வரை..
அரசே உனக்கொரு வேண்டுகோள்..
உன் ஊழியனுக்கு மட்டும்
ஊதியத்தோடு விடுமுறை..
மகிழ்ச்சி..
உழைக்கும் வர்க்கத்திற்கு
உண்ண ஒருவேளை உணவு?!!..
வாழ்த்து கவிதைகள்
தாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும்.
தீபாவளி நல் வாழ்த்து கவிதைகள்
அதிரடி வேட்டுச் சத்தம்
அரைகுறை எண்ணெய் குளியல்
சரசரக்கும் புத்தாடை
கசகசக்கும் வியர்வை
நமுத்துப்போன புஸ்வாணம்
அடுத்த வீட்டின் அதிகவெடிச் சத்தம்
ஆங்காங்கே கையில் சூடு
அழகான பெண்கள் கூட்டம்
கிடைக்காத ‘ஆதவன்’ டிக்கெட்
அயர்ச்சி தரும் ‘வித்தியாசமான’ படங்கள்
அலுக்கவைக்கும் வெட்டிமன்றம்
பழகிப்போன புதுமுகங்கள்
ட்விட்டரில் க்ரீட்டிங்ஸ்
நான்ஸ்டாப் செல்போன் ஒலி
அவ்வப்போது ‘சாட்டிங்’ க்ரீட்டிங்க்ஸ்
அலுக்காத நண்பர்கள் கூட்டம்
கொஞ்சூண்டு குட்டித் தூக்கம்
கொஞ்சமாய் அஜீரணம்
மறந்து விட்ட நரகாசுரன்
மறக்காமல் ‘கங்கா ஸ்நானம்’!
விடியட்டும் நல்ல தீபாவளி
தீபாவளி நல் வாழ்த்து கவிதைகள்
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.
தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
புண்ணியம் சேர்ப்பதில்
பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.
கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.
காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்
அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.
பண்டிகைகள் Funடிகைகளாக
அந்த Sun டி.வியை அணைப்போம் -அன்பில்
குடும்பம் நண்ர்களை இணைப்போம்
அரவணைப்போம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Subscribe to:
Posts (Atom)