நண்பனின் காதல் கல்யாண வாழ்த்து கவிதைகள்


எப்போது ஒன்று சேர்வோம்?
எப்படி ஒன்று சேர்வோம்?
இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள்
இனிமேல் உமக்கு இல்லை!

உணர்வுகளால் நேற்றுவரை
உரையாடிய காதல்ஜோடி
இன்றிலிருந்து என்றென்றும்
உடலாலும் இணைகிறது!

உள்ளத்தில் நீர் சுமந்த
உண்மையான அன்பிற்காய்
திருவிழா செய்கின்றோம்!
திருமணமாம் உமக்கின்று!

இதயத்தின் உரசல்களில்
உருவான ஒளித் தீப்பிழம்பு
விண்வெளியில் பயணித்து
கண்மணிகள் கதைசொல்லும்!

முத்தான காதல் செய்த
மணமக்கள்  ஓருயிராய்
வாழ்க பல்லாண்டு

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்