கண்முன்னே சொன்னால் மறந்து போகும்
கவிதையாய் சொன்னால் காற்றில் போகும்
எப்படி சொல்ல என் வாழ்த்தை
சற்று வித்தியாசமாய் இறைவா என் ஆயுளில் பாதியைஎன் நண்பனின் ஆயுளுடன் சேர்த்து விடு
என்று வேண்டி வாழ்த்துகிறேன்நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று
தன் சாதனைப் பட்டியலில் உன் பிறப்பை முதன்மையாய்க் குறித்து வைத்திருப்பான் பிரம்மன்! | ![]() |
கால எந்திரம் கிடைத்தால் நீ பிறந்தபொழுது, நான் என்ன செய்து கொண்டிருந்தேன்? எனப் பார்க்க ஆசை! | ![]() |
மழைக் காலம், கார்காலமெல்லாம், எந்த மாதமென்று எனக்குத் தெரியாது… நீ பிறந்த மாதம் அழகுக்காலம்!* | ![]() |
உன் பிறந்த நாளை தேவதைகள் தினமாய்க் கொண்டாட தேவதைகளே தீர்மானித்திருப்பது உனக்குத் தெரியுமா? | ![]() |
உன் பெயரில் நடக்கும் பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள தவம் கிடக்கின்றன… எல்லாத் தெய்வங்களும்! பிறக்கும்போது 3 கிலோ இருந்தாயாம். பத்து மாதமாய் உன் அம்மாவால், 3 கிலோ அழகுதான் சேர்க்க முடிந்ததா? | ![]() |
நீ பிறந்த மருத்துவஅறைக்கு ராசிகூடிவிட்டதாம். அழகுக்குழந்தை பிறக்க அங்குதான் பிரசவம் பார்க்கவேண்டுமென அடம்பிடிக்கிறார்களாம் கர்ப்பிணி பெண்கள். | ![]() |
ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லையடி. உன் பிறந்தநாளை மாதம்தோறும்… இல்லையில்லை, நீ பிறந்தகிழமையென்று வாரம் தோறும் கொண்டாடுவோமா? | ![]() |
உன் பிறந்த நாளை பார்த்து மற்ற நாட்களெல்லாம் பொறாமை படுகின்றன உன் பிறந்த நாளில் பிறந்திருக்கலாம் என்று... | ![]() |
உன் பிறந்த நாள் பரிசு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு என்ன பரிசாக இருந்தாலும் என் பிறந்த நாளில் பிறந்ததாய் இருக்க வேண்டும் என்றாய் ... எனக்கு தெரிந்து என் கவிதை தவிர வேறொன்றும் இன்று ஜனனமாகவில்லை... பல்லாண்டு வாழ்க ... நீயும் உன் உணர்வுகளும்... | ![]() |
விந்தையான உலகம்…….! விழங்கமுடியா மானிடம்……! நொந்துபோய் வீழாமல்……. சிந்தனைவேண்டும். சீரியதாய் நேரியதாய் வாழக்கிடைத்த பயன் நான்மட்டும் வாழ்வதல்ல நாம்வாழ நான்வாழ சுற்றமே வாழவேண்டும் இவ்வுண்மை புரிதல்வேண்டும் நீவீர் சிரித்து இன் நிலத்தைச் சிரிக்கவைத்து நீர் வாழும் வாழ்வை நினைத்துப் பார்க்கின்றேன் இதுதான் வாழ்கை வருடங்கள் வருவதிலும் போவதிலும் என்னபயன்? செய்யும் செயல்களால்த்தான் செயல்கழுக்கும் பயன் இன்னுமோர் ஆண்டு இனிதாய் மலர்ந்திருக்கு புதிதாய் பெரிதாய் நிறைவாய் உயர்வாய் வாழ வாழ்த்துகிறேன்…! - அன்புடன் ஆனந்தன் | ![]() |
இளம்குருத்தின் பெரும் வாழ்த்துக்கள் வளம் கொண்ட கலைஞனே வாழ்க களம் எத்தனை கண்டு களித்திருப்பாய் தளம் உனக்கு தேடித்தான் அமைந்தது உளம் உனக்கு சுத்தியாய் இருந்ததால் உன்னால் புகழ் பெற்ற கலைஞர்கள் ஏராளம் கொடி கட்டி பறப்போர் தாராளம் தளம் அமைத்திட உன் வளம் இழந்தாய் கலக்கம் காணா வித்தகனே! கலையே துலக்கமாய் உன் மூச்சானது நீ ஒரு நக்கீரன் நெற்றிக் கண் காட்டிலும் குற்றம் குற்றமென உரைப்பவன் தட்டிக்கொடுப்பதில் வல்லவன் நீ சுட்டிக் காட்டியே செப்பனிடுவாய் மட்டில்லா மகிழ்வு வாழ்த்தும் வாய்ப்புக்கு ஏற்றுக்கொள் வாழ்க பல்லாண்டு…! -நடனக்கலைஞன் கீதன் | ![]() |
மக்கள் மனங்களில் வாழ்பவன் கலைஞன் மனித மனங்களை அழகுறச் செய்பவனும் கலைஞன்தான் அழவைப்பார் சிரிக்க வைப்பார் சிந்திக்கவும் செய்யும் பல்துறை ஆற்றல் நிறைந்தவர் குணபாலன் இவர் ஒரு நகைச்சுவை வங்கி சேமிப்பா விளைச்சலா என்பதை அறிவது கடினம் பெய்யெனப் பெய்யும் மழை போல் கொட்டெனக் கொட்டும் நகைச்சுவை கலை இவருக்குத் தாய்வீடு வேலையும் வீடும் மாமியார் வீடு மேடை தான் முதல் மஞ்சம் நடிப்பே மானசீகக் காதலி துடிப்பாகத் திரியும் பதினாறு வயது மார்க்கண்டேயர் ஐம்பது வயதென்பது பதிவோடு மட்டுமே! வஞ்சனை என்பது கொஞ்சமும் கொஞ்சியதில்லை பஞ்சி என்பது நஞ்சென்பார் தமிழருக்கு வாய்த்த விகடகவி வாழ்க பல்லாண்டு…! -அன்புடன் பரமநாதன் | ![]() |
எங்கள் குணபாலன் குணத்தில் பாலன் சிரிக்கவைத்தே சமூகத்தைச் சுத்தம் செய்யலாமென சகலரையும் கூப்பிட்டவன்! சிந்திக்க வைப்பதில் சார்லி சப்பிளினையும் சாப்பிட்டவன்! சிரிக்கத் தெரியாத முகங்களில் கூட சிரிப்பு விதையை நட்டவன்! நையாண்டி என்னும் நாட்டுத் துப்பாக்கியால் மூடக் கருத்துக்களைச் சுட்டவன்! ஒன்பது வயதில் ஒப்பனை பூசத் தொடங்கியவன் இவனைப்போல இன்னும்… நூறு மலர்கள் மலரட்டும் நாறும் உலகம் சிறக்கட்டும்! எங்கள் குணபாலன் நூறு வயதுவரை வாழட்டும் நாளைய உலகமும் மகிழட்டும்! வாழ்க கலை வளர்க கலைப்பணி! -காவலர் | ![]() |
நல்லதொரு தாரம் வரமாய் வாய்த்தது தனிச்சிறப்பு இருந்தாலும் முதல் தாரம் கலை என்பதற்கு முதல் சாட்சி நாமே! வல்லவனாய் நல்லவனாய் வித்தகனாய் வாழ்ந்த என் நண்பன் மேலும் பல வெற்றிப் படிகளேறி சாதனை மலர்கள் பறிக்க நண்பன் நான் வாழ்த்துகிறேன் காலத்தின் தேவை அதிகரித்த வேளையிது ஓய்வுக்கு இடமேது நண்பா! களமிறங்கு கருத்தான படைப்போடு தளம் தேடிப் பொருள் சமைப்போம் கலையென்ற ஆயுதத்தால் குலைந்து போன எங்கள் சமூகக் கறை களைவோம் நாளை நமதாகட்டும் உழைப்போம் விடிவிற்காய் வளமும் நலனும் கிட்ட பிரார்த்திக்கும்…! நண்பன் தயாநிதி | ![]() |
கை ககளாலே அரவைணத்து கால்களாலே உலகம் சுற்றி இசை யினிலே மெய்மறந்து கவிதையாக வாழ்ந்து காட்டி அடக்கத்திலே சிறந்து விளங்கி கடைமயிலே தைலச் சிறந்து அன்பினாலே சுடர் ஏற்றி பிறருக்கும் பகிர்ந்தளித்து பல்லாண்டு காலம் நீ வாழ்க | ![]() |