Showing posts with label அன்னையர் தின வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label அன்னையர் தின வாழ்த்துக்கள். Show all posts

அன்னையர் தின வாழ்த்துக்கள்

உன்னைப் போல்
சமைக்க தெரியாது
என் மனைவிக்கு
ஆனாலும்
அவள் கைவிரலில்
உன் கைவாசம்
நீ பிடித்து தந்தவள்
அல்லவா..


உன் மடியில் தூங்கும்
தூரத்தில் நானில்லை
என்பதால்த்தான் என் மடியில் தூங்கிக்
கொண்டிருக்கிறது
எல்லா துக்கங்களும்

என்னை பாதுகாப்பாகத்தான்
வைத்திருக்கிறாள் என் மனைவி
ஆனாலும்
பயமாக இருக்கிறது உன்
கருவறையில் இல்லை நான்

அடுத்த அன்னையர் தினத்திற்கு..,

பார்த்து ஒரு வருடம் ஆகிவிட்டது
சென்ற ஆண்டு
அன்னையர் தினத்தில் பார்த்தது
ஆவலுடன் , பாசத்துடன்
புறப்பட்டேன் !
அன்னையைக் காண

என் அன்னை வாழும்
முதியோர் இல்லத்துக்கு !
நல்ல வேளை இன்று
ஞாயிறு விடுமுறை !
இல்லையேல் அடுத்த
ஆண்டு வரைக் காத்திருக்க
வேண்டும்!
அடுத்த அன்னையர் தினத்திற்கு !

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

அன்னையர் தினம்
கொண்டாட்டத்துக்குறிய நாள்
அன்னையிடம் ஆசி பெற்று
அவளுக்கு பரிசு தந்து

இன்று முழுவதும் அவளுடன்
இருக்க வேண்டும் !
பத்து மாதம் சுமந்து
பெற்று , பாதுகாத்து , வளர்த்து
இந்த சமுதாய சாக்கடையில்
நீந்த கற்று தந்தவள்
அல்லவா தாய் !
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

அன்னையர் தின வாழ்த்து கவிதைகள்

நான்
பசியோடு படுத்தால்
உணவுக்குழாயுக்குள் வந்து
ஊட்டி விடுவாய் !
எனக்கு
காய்ச்சல் என்றால்
நீயுமல்லவா
கஞ்சி குடிப்பாய் !
என்னை
தடவிக்கொடுக்கின்ற எல்லாகைகளுமே
விரல்நுனியில் ...
விஷத்தை வைத்திருக்கிறது !
உன்
விரல்கள் மட்டும்தானம்மா -
இந்தப் பாலையில்
என் பாதம்
பொசுங்குமுன்னே...
தோலாய் வந்து நிற்கிறது !

அன்னையர் தின வாழ்த்து கவிதைகள்


கார்முகிலைக் கிழித்துக்
கொட்டும் மழை நீ
சிறுதுளி நான்!
மடையுடைத்துப் பெருகும்
காட்டாற்று வெள்ளம் நீ
சிறு ஓடம் நான்!
ஆழம் அகலமறிந்திடா
ஆழ்கடல் நீ
சிறு அலை நான்!
கண்ணிலும் கருத்திலும்
அடங்கா அண்டம் நீ
சிறு அணு நான்!
விரவிப் பரவும் இனிய
நறுமணம் நீ
சிறு மல்லிகை நான்!
கவிஞர்கள் வேண்டி நிற்கும்
கற்பனை நீ
சிறு கவிதை நான்!
அமரர் கடைந்தெடுத்த
அமுதம் நீ
தேன்துளி நான்!
அமுதினும் இனிய
தமிழ் நீ
உயிரெழுத்து நான்!
பிரம்மமாய் சக்தியாய்
ஆதியாயான தாய் நீ
உன் சேய் நான்!
அன்புடன்...
வாணி

அன்னையர் தின வாழ்த்து கவிதைகள்


என் தாயின் தியாகத்தை
ஏற்றி நான் போற்றினேன்
மகனுடைய நலனுக்காய்
மகத்தான சேவை செய்தாள்
தந்தையாக நானாகி
தத்தளித்த வேளையிலே
தன் மகனுக்காய் உருகிய
தாரத்தின்
பெருமையுணர்ந்தேன்
அன்னையர் தினத்திலே
அவளுடைய நினைவு காக்க
அம்மாவாய் திகழ்கின்ற என்
மனையாளின் புகழ் சொல்வேன்
அன்னையர் தினமதிலே உங்கள்
அன்புத் தெய்வங்களின்
நினைவாக
அருமை நண்பர்களே நீங்கள்
மணந்தவளை போற்றிடுவீர்
அன்னையர் தினத்தினில்
அழியாத உண்மை சொல்வேன்
மாதா மடும் அன்னையல்ல எமை
மணந்த மனையாளும் அன்னைதான்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

அன்னையர் தின வாழ்த்து கவிதைகள்

அன்பெனும் ஆலயத்தில்
பாசமெனும் தீபம்
ஏற்றி வைத்ததோ
அன்னையெனும் தெய்வம்

அம்மாவின் அரவணைப்பில்
அடங்கும் மனத்துயரம்
அகிலத்திலில்லை அன்னைக்கு
ஈடாய் ஒரு செல்வம்

பாசத்தைப் பொழிவாள்
பலனொன்றும் வேண்டாள்
நேசத்தில் மலர்வாள்
நெஞ்சத்தில் பூத்திடுவாள்

கண்ணீரைக் கண்டால்
கலங்கித் தவித்திடுவாள்
உடல் கொஞ்சம் துவண்டால்
உயிர் வாடித்
துடித்திடுவாள்

அன்னையர் தின வாழ்த்து வாழ்த்து கவிதைகள்


 *உன்
 கருப்பை மூலம் எனக்கு
 இரப்பை கொடுத்தவளே !
 உன் மீது
 வெறுப்பை கொடுக்குமுன் - இறைவன் எனக்கு
 இறப்பை கொடுக்கட்டும் !
 *ஆம்
 நான் இறைவனிடம்
 பிரார்த்திப்பதும் அதுதான்.
 *நான் கேட்டு
 நீ மறுத்த  நாட்களை
 நான் சந்தித்ததேயில்லை...*
 *அதுபோல
 நீ கேட்டு
 நான் மறுக்கும்  நாளொன்றில்
 என் பெயர் பிணம் !*
          - ரசிகவ் கே.ஞானியார்

அன்னையர் தின வாழ்த்துக்கள்


உன் சமையலை
குறைகூறியே சாப்பிட்ட நான்
இங்கே
குறைகளை மட்டுதானம்மா சாப்பிடுகிறேன்
தயவுசெய்து
நீ அனுப்புகின்ற
கடிதத்தில் ஒரே ஒரு
சோற்றுபருக்கையாவது ஒட்டு

அன்னையர் தின வாழ்த்துக்கள்

ராஜாத்தி என்று அன்பாய் குழையவும்...
சீரியல் பார்ப்பதற்காய் சண்டை போடவும்..
இரவில் தூங்காமல் புத்தகம் படிப்பதற்கு கோவிக்கவும்....
தோழியோடு வீடு வந்தால் ஓரிரு வார்த்தைகளில் தனியே விடவும்...
என் முகத்தில் தோன்றும் திடீர் பறுக்களுக்காய் கவலைபடவும்...
புத்தகம் பிரித்த உடன் தூங்கி போகவும்...
எந்த கோவிலுக்கு போனாலும் எனக்காக அர்ச்சனை செய்யவும்...
உன் எல்லா செயல்களிலும் நான் இருப்பேன்
என்னால் மாதம் ஒரு முறை உன்னை பார்க்க வரவும்
எப்போதாவது இப்படி கவிதை எழுதவும் மட்டுமே முடிகிறது.

அன்னையர் தின வாழ்த்துக்கள்

கருவறையில் காத்து
கவித்துவமாய்
என்னை பெற்ற
என் அன்பு அம்மா நீ என் அருகில் இல்லாவிடினும் உன் பாசம் என்றும் பெற்ற இந்த மகன் உனக்காக இந்த பதிவை
சமர்ப்பிக்கிறேன்
அன்னையர் தின வாழ்த்துக்கள்