கண்முன்னே சொன்னால் மறந்து போகும்
கவிதையாய் சொன்னால் காற்றில் போகும்
எப்படி சொல்ல என் வாழ்த்தை
சற்று வித்தியாசமாய் இறைவா என் ஆயுளில் பாதியைஎன் நண்பனின் ஆயுளுடன் சேர்த்து விடு
என்று வேண்டி வாழ்த்துகிறேன்நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று
| தன் சாதனைப் பட்டியலில் உன் பிறப்பை முதன்மையாய்க் குறித்து வைத்திருப்பான் பிரம்மன்! | ![]() |
கால எந்திரம் கிடைத்தால் நீ பிறந்தபொழுது, நான் என்ன செய்து கொண்டிருந்தேன்? எனப் பார்க்க ஆசை! | ![]() |
மழைக் காலம், கார்காலமெல்லாம், எந்த மாதமென்று எனக்குத் தெரியாது… நீ பிறந்த மாதம் அழகுக்காலம்!* | ![]() |
| உன் பிறந்த நாளை தேவதைகள் தினமாய்க் கொண்டாட தேவதைகளே தீர்மானித்திருப்பது உனக்குத் தெரியுமா? | ![]() |
உன் பெயரில் நடக்கும் பிறந்தநாள் அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள தவம் கிடக்கின்றன… எல்லாத் தெய்வங்களும்! பிறக்கும்போது 3 கிலோ இருந்தாயாம். பத்து மாதமாய் உன் அம்மாவால், 3 கிலோ அழகுதான் சேர்க்க முடிந்ததா? | ![]() |
நீ பிறந்த மருத்துவஅறைக்கு ராசிகூடிவிட்டதாம். அழகுக்குழந்தை பிறக்க அங்குதான் பிரசவம் பார்க்கவேண்டுமென அடம்பிடிக்கிறார்களாம் கர்ப்பிணி பெண்கள். | ![]() |
ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லையடி. உன் பிறந்தநாளை மாதம்தோறும்… இல்லையில்லை, நீ பிறந்தகிழமையென்று வாரம் தோறும் கொண்டாடுவோமா? | ![]() |
உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12 மணிக்கே வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய். நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திருந்ததை எப்படி சொல்லிப் புரிய வைப்பது? | ![]() |
| உன் பிறந்த நாளை பார்த்து மற்ற நாட்களெல்லாம் பொறாமை படுகின்றன உன் பிறந்த நாளில் பிறந்திருக்கலாம் என்று... | ![]() |
| உன் பிறந்த நாள் பரிசு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு என்ன பரிசாக இருந்தாலும் என் பிறந்த நாளில் பிறந்ததாய் இருக்க வேண்டும் என்றாய் ... எனக்கு தெரிந்து என் கவிதை தவிர வேறொன்றும் இன்று ஜனனமாகவில்லை... பல்லாண்டு வாழ்க ... நீயும் உன் உணர்வுகளும்... | ![]() |
விந்தையான உலகம்…….! விழங்கமுடியா மானிடம்……! நொந்துபோய் வீழாமல்……. சிந்தனைவேண்டும். சீரியதாய் நேரியதாய் வாழக்கிடைத்த பயன் நான்மட்டும் வாழ்வதல்ல நாம்வாழ நான்வாழ சுற்றமே வாழவேண்டும் இவ்வுண்மை புரிதல்வேண்டும் நீவீர் சிரித்து இன் நிலத்தைச் சிரிக்கவைத்து நீர் வாழும் வாழ்வை நினைத்துப் பார்க்கின்றேன் இதுதான் வாழ்கை வருடங்கள் வருவதிலும் போவதிலும் என்னபயன்? செய்யும் செயல்களால்த்தான் செயல்கழுக்கும் பயன் இன்னுமோர் ஆண்டு இனிதாய் மலர்ந்திருக்கு புதிதாய் பெரிதாய் நிறைவாய் உயர்வாய் வாழ வாழ்த்துகிறேன்…! - அன்புடன் ஆனந்தன் | ![]() |