நண்பனின் பிறந்த நாள் வாழ்த்துநல்லதொரு தாரம் வரமாய்
வாய்த்தது தனிச்சிறப்பு
இருந்தாலும் முதல் தாரம்
கலை என்பதற்கு முதல் சாட்சி நாமே!

வல்லவனாய் ந‌ல்லவனாய் வித்தகனாய்
வாழ்ந்த என் நண்பன்
மேலும் பல வெற்றிப் படிகளேறி
சாதனை மலர்கள் பறிக்க
நண்பன் நான் வாழ்த்துகிறேன்

காலத்தின் தேவை அதிகரித்த வேளையிது
ஓய்வுக்கு இடமேது நண்பா!
களமிறங்கு கருத்தான படைப்போடு
தளம் தேடிப் பொருள் சமைப்போம்
கலையென்ற ஆயுதத்தால் குலைந்து போன
எங்கள் சமூகக் கறை களைவோம்
நாளை நமதாகட்டும்
உழைப்போம் விடிவிற்காய்
வளமும் நலனும் கிட்ட பிரார்த்திக்கும்…‍!

நண்பன் தயாநிதி

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்