நண்பனின் பிறந்த நாள் வாழ்த்துஎங்கள் குணபாலன்
குணத்தில் பாலன்
சிரிக்கவைத்தே சமூகத்தைச்
சுத்தம் செய்யலாமென
சகலரையும் கூப்பிட்டவன்!

சிந்திக்க வைப்பதில்
சார்லி சப்பிளினையும்
சாப்பிட்டவன்!

சிரிக்கத் தெரியாத
முகங்களில் கூட
சிரிப்பு விதையை நட்டவன்!

நையாண்டி என்னும்
நாட்டுத் துப்பாக்கியால்
மூடக் கருத்துக்களைச் சுட்டவன்!

ஒன்பது வயதில்
ஒப்பனை பூசத் தொடங்கியவன்
இவனைப்போல இன்னும்…
நூறு மலர்கள் மலரட்டும்
நாறும் உலகம் சிறக்கட்டும்!

எங்கள் குணபாலன்
நூறு வயதுவரை வாழட்டும்
நாளைய உலகமும் மகிழட்டும்!

வாழ்க கலை
வளர்க கலைப்பணி!
-காவலர்

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்