நிறைவாய் வாழ்க…விந்தையான உலகம்…….!
விழங்கமுடியா மானிடம்……!
நொந்துபோய் வீழாமல்…….
சிந்தனைவேண்டும்.
சீரியதாய் நேரியதாய்

வாழக்கிடைத்த பயன்
நான்மட்டும் வாழ்வதல்ல
நாம்வாழ நான்வாழ
சுற்றமே வாழவேண்டும்
இவ்வுண்மை புரிதல்வேண்டும்

நீவீர் சிரித்து
இன் நிலத்தைச் சிரிக்கவைத்து
நீர் வாழும் வாழ்வை
நினைத்துப் பார்க்கின்றேன்
இதுதான் வாழ்கை

வருடங்கள் வருவதிலும்
போவதிலும் என்னபயன்?
செய்யும் செயல்களால்த்தான்
செயல்கழுக்கும் பயன்

இன்னுமோர் ஆண்டு
இனிதாய் மலர்ந்திருக்கு
புதிதாய் பெரிதாய்
நிறைவாய் உயர்வாய்
வாழ வாழ்த்துகிறேன்…!

- அன்புடன் ஆனந்தன்

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்