நண்பனின் பிறந்த நாள் வாழ்த்துஇளம்குருத்தின் பெரும் வாழ்த்துக்கள்
வளம் கொண்ட கலைஞனே வாழ்க
களம் எத்தனை கண்டு களித்திருப்பாய்
தளம் உனக்கு தேடித்தான் அமைந்தது

உளம் உனக்கு சுத்தியாய் இருந்ததால்
உன்னால் புகழ் பெற்ற கலைஞர்கள் ஏராளம்
கொடி கட்டி பறப்போர் தாராளம்
தளம் அமைத்திட உன் வளம் இழந்தாய்

கலக்கம் காணா வித்தகனே!
கலையே துலக்கமாய் உன் மூச்சானது
நீ ஒரு நக்கீரன்
நெற்றிக் கண் காட்டிலும்
குற்றம் குற்றமென உரைப்பவன்

தட்டிக்கொடுப்பதில் வல்லவன் நீ
சுட்டிக் காட்டியே செப்பனிடுவாய்
மட்டில்லா மகிழ்வு வாழ்த்தும் வாய்ப்புக்கு
ஏற்றுக்கொள் வாழ்க பல்லாண்டு…!

-நடனக்கலைஞன் கீதன்

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்