பொங்கல் திருவிழா..

வங்கக் கடல் தமிழன் எங்கு குடி இருப்பினும்
சங்கத் தமிழ் சிறப்பை மறந்து வாழ்வனோ

பொங்கல் திருநாளினை போற்றி மகிழ்ந்திட
தங்க நிறச் சூரியத் தலைவனை முந்தி எழுந்து
பொங்கிடப் புதுப் பானை அலங்கரித்து..

செங்கரும்புப் பந்தல் தொங்க மாவிலை தோரணம் முடிக்க..

மங்களம் நிறைந்த மனையாள் நீராடிப் புது பட்டுடுத்தி
தங்கமக்கள் சிறுமழழை சூழ சேவலும் மயிலும் கூவ
வெங்கலமாய் பொங்கி வரும் கதிரவனை வணங்கி
செங்கீற்று விள்க்கேற்றி கற்பூற சுடரேற்றி விறகடுக்கி
தங்கமென சிவந்த தணலடுபில் வைத்த் புதுப்பானை நீரூற்றி

அங்கமழ பாடுபட்டு உழுவார் நிலம் புலந்த் புத்தரிசி
செங்கமலச் சோலை சேகரித்த தேனோடு பாகும் பருப்பும்
எங்கள் குலமாத பொழிந்த பசும் பாலும் நெய்யுமிட்டு
பொங்கலோ பொங்கல் எனக் குரவியிட்டு வரப்புயர வாழ்வளித்த
மங்காத செல்வம் இயற்கை அண்ணைக்கு நன்றிப் பெருவிழா

சங்க தமிழினதின் பெருவிழா பொங்கல் திருவிழா..

மணிவண்ணன்

2 comments:

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்