கலைஞனுக்கு வாழ்த்துக்கள்…!
மக்கள் மனங்களில் வாழ்பவன் கலைஞன்
மனித மனங்களை அழகுறச்
செய்பவனும் கலைஞன்தான்
அழவைப்பார் சிரிக்க வைப்பார்
சிந்திக்கவும் செய்யும் பல்துறை
ஆற்றல் நிறைந்தவர் குணபாலன்

இவர் ஒரு நகைச்சுவை வங்கி
சேமிப்பா விளைச்சலா என்பதை
அறிவது கடினம்
பெய்யெனப் பெய்யும் மழை போல்
கொட்டெனக் கொட்டும் நகைச்சுவை

கலை இவருக்குத் தாய்வீடு
வேலையும் வீடும் மாமியார் வீடு
மேடை தான் முதல் மஞ்சம்
நடிப்பே மானசீகக் காதலி
துடிப்பாகத் திரியும்
பதினாறு வயது மார்க்கண்டேயர்

ஐம்பது வயதென்பது பதிவோடு மட்டுமே!
வஞ்சனை என்பது கொஞ்சமும்
கொஞ்சியதில்லை
பஞ்சி என்பது நஞ்சென்பார்
தமிழருக்கு வாய்த்த விகடகவி
வாழ்க பல்லாண்டு…!
-அன்புடன் பரமநாதன்

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்