பொங்கல் வாழ்த்து* * * பொங்கல் வாழ்த்து * * *


மங்கல அணியும் பொட்டும்
. . மரகத மணிபோற் கண்ணும்
குங்கும நுதலும் தண்டைக்
. . குலுங்கிடும் காலும் மஞ்சள்
தங்கிய முகமும் வண்ணத்
. . தடம்பணைத் தோளும் கொண்ட
மங்கையர் கைபார்த் துண்ண
. . மலர்கவே பொங்கல் நன்னாள்.


பூச்சிறு மழலை மேனி
. . புத்துடை நகைகொண் டாட
ஆச்சியர் துணைவர் சேர
. . ஆனந்தத் தமிழ்ப்பண் பாட
பாற்சுவை வழங்குநன் னாள்
. . பழந்தமிழ் வளர்த்த பொன் னாள்
போற்சுவை நாளொன் றில்லை
. . பொலிகவே இன்பப் பொங்கல்.


2 comments:

  1. Nantri.. Ithai nan nanbargalukku pongal vazhthu anuppa payanpaduthinen.. nantri -R

    ReplyDelete
  2. பொங்கல் வாழ்த்துக்கள்... நானும் எனது முகநூளில் இதை பகிர்கின்றேன்,.....

    ReplyDelete

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்