திருமண [கல்யாண] நாள் வாழ்த்து கவிதை


பூவினால் காய்கள் தோன்றும்!
புலவனால் கவிதை தோன்றும்!
நாவினால் சொற்கள் தோன்றும்!
காதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம்
இனிதாய் கூவுங்கள் மணமக்களை வாழ்த்தியிங்கு

கல கல பேச்சு உண்டு!
களங்கமில்லா தோற்றமுண்டு! -தன்
பல கலைத் திறனினாலே -மணமக்கள்

நலிவடையா விளை நிலம் போலானார்!

கன்னத்தில் பொலிவு தோன்றும்
கரும்பெனச் சிரிக்கும்போது! -எல்லோரது
எண்ணங்களிலும் இனிமை தோன்றும்
வாழ்த்துவோம் மணமக்களை -இன்னுமோர்
நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று…

5 comments:

 1. அறுகு போல் வேரோடி
  ஆல் போல் தழைத்து
  இந்தமிழ்ச்சுவை போல் கூடி
  ஈகை பல புரிந்து
  உற்றமிழ் மக்களோடு - எவர்க்கும்
  ஊறு விழைவிக்காது
  என்பும் பிறர்க்காய் - எண்ணி
  ஏனிந்த உடல் பெற்றோமென்றே
  ஐயம் தெளிந்த பின்னர்
  ஒற்றுமையாய்
  ஓங்காரத்துடன்
  ஓளடதங்கள் அருளி
  ஃதோடு வாழ்வாங்க்கு வாழியவே.
  http://andamantamilan.blogspot.com

  ReplyDelete
 2. அருமையான கவிதை

  ReplyDelete
 3. அருமையான கவிதை

  ReplyDelete
 4. அருமையான கவிதை

  ReplyDelete

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்