அன்னையர் தின வாழ்த்து கவிதைகள்

நான்
பசியோடு படுத்தால்
உணவுக்குழாயுக்குள் வந்து
ஊட்டி விடுவாய் !
எனக்கு
காய்ச்சல் என்றால்
நீயுமல்லவா
கஞ்சி குடிப்பாய் !
என்னை
தடவிக்கொடுக்கின்ற எல்லாகைகளுமே
விரல்நுனியில் ...
விஷத்தை வைத்திருக்கிறது !
உன்
விரல்கள் மட்டும்தானம்மா -
இந்தப் பாலையில்
என் பாதம்
பொசுங்குமுன்னே...
தோலாய் வந்து நிற்கிறது !

9 comments:

 1. Arumaiyaa Irukku :

  எனக்கு
  காய்ச்சல் என்றால்
  நீயுமல்லவா
  கஞ்சி குடிப்பாய் !
  By
  Rasa.ganesan

  ReplyDelete
 2. Arumaiyaa Irukku :

  எனக்கு
  காய்ச்சல் என்றால்
  நீயுமல்லவா
  கஞ்சி குடிப்பாய் !
  By
  Rasa.ganesan

  ReplyDelete
 3. Arumai :

  எனக்கு
  காய்ச்சல் என்றால்
  நீயுமல்லவா
  கஞ்சி குடிப்பாய் !

  ReplyDelete
 4. மடியில் சுமந்து ....
  வடிவம் தந்து ...

  மாதம் தசமும் சுமந்து ...
  வலியும் ஏற்று ...

  ஜனிக்கவும் வைத்து ...

  உதிரம் உருக்கி ...
  பாலாய் கொடுத்து ...

  ஊனும் கொடுத்து ....
  உறக்கம் தொலைத்து ....

  நெஞ்சில் சுமந்து ....
  கணமதில் மகிழ்ந்து ...

  இமை போல் காத்து ...
  அன்பே பொழிந்து ...

  வளர நீ மகிழ்ந்து ...
  என்றும் நெஞ்சில் சுமக்கும் ...

  அம்மா

  என்ன செய்தேன் தவமோ ...
  உன் மகவாய் பிறக்க ...

  என்றும் பணிவேன் உன்னை ...
  காலம் மட்டும் தாயே ....

  ReplyDelete
 5. அம்மா........
  உயிர் கொண்ட கருவுக்கு உரு தந்தாய்........
  உரு கொண்ட கருவுக்கு மடி தந்தாய்........
  மடி புகுந்த உருவுக்கு மாதம் தசமும் தந்தாய்.......
  வலியையும் சுகமாக ஏற்றும் கொண்டாய்.........
  அதிலே நீயும் மன நிறைவு கொண்டாய்.........
  உன் சுகம் மறைந்தாய்........
  உறக்கம் தொலைத்தாய்.......
  வலி கொடுத்த என்னையும் பெற்றும் விட்டாய்.........
  அதிலே நீயும் மகிழ்ச்சி கொண்டாய்........
  உதிரத்தை கொடுத்தாய் பாலாக.......
  அதைக்கொண்டு உயிர்த்தேன் நாளும்......
  ஊன் கொடுத்தாய் உயிராக........
  காத்தாய் எனை நீ கண்ணிமையாக.......
  நான் அழுதால் நீயும் துடித்தும் விட்டாய்........
  நான் சிரித்தால் நீயும் அணைத்துக்கொண்டாய்.....
  உனது உலகமாக என்னை வைத்தாய்.....
  எதைக்கொண்டு நான் தீர்ப்பேன் பிறவிக்கடனை.....
  நடமாடும் உயிர் கொடுத்த தெய்வம் நீ......
  அனுதினம் சிரம் தாழ்ந்து பதம் பணிவேன்......அம்மா.....

  ReplyDelete

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்