அன்னையர் தின வாழ்த்து கவிதைகள்

அன்பெனும் ஆலயத்தில்
பாசமெனும் தீபம்
ஏற்றி வைத்ததோ
அன்னையெனும் தெய்வம்

அம்மாவின் அரவணைப்பில்
அடங்கும் மனத்துயரம்
அகிலத்திலில்லை அன்னைக்கு
ஈடாய் ஒரு செல்வம்

பாசத்தைப் பொழிவாள்
பலனொன்றும் வேண்டாள்
நேசத்தில் மலர்வாள்
நெஞ்சத்தில் பூத்திடுவாள்

கண்ணீரைக் கண்டால்
கலங்கித் தவித்திடுவாள்
உடல் கொஞ்சம் துவண்டால்
உயிர் வாடித்
துடித்திடுவாள்

1 comment:

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்