மே தின வாழ்த்து கவிதைகள்


வயலும் வயல்சார்ந்த
வனப்பான பூமியது
ஆறுபருவங்கள் கொண்ட
அழகிய மருதத்திணை

ஆடி மாதம்அதுவென

அனைவருக்கும் பறைசாற்ற
நாற்று நடும்பெண்களின்
நகையொலி ஒருபுறம்

ஆலமர தொட்டிலிலே

ஆரிரரோ இல்லாமலே
அயர்ந்து துயில்கொள்ளும்
அழகுமழலைகள் மறுபுறம்

வயகாட்டின் மூலையிலே

வசதியான ஒருகூரை
கூரைமேல் குயில்ஒன்று
கூவியாரை அழைக்கிறதோ

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்