மே தின வாழ்த்து கவிதைகள்

பிள்ளை கை பொம்மையை
பட்டென பிடுங்கியதுபோல்
பீரிட்ட அழுகையை
பிடித்து நிறுத்தினேன்

அழுது கொண்டிருக்க

அதுவல்ல நேரம்
காக்கை குளியல்முடித்து
கணவனுடன் புறப்பட்டேன்

புகைவண்டி ஏறிஅமர

பழகிய முகங்களுக்கு
செயற்கை புன்னகைவீசி
செய்தித்தாள் முகம்புதைத்தேன்

அலுவலகம் நுழைந்ததும்

ஆயாசம் தோன்றியது
அதேகணினி அதேசெயற்கைதனம்
அதேகணக்குகள் அதேபிணக்குகள்

காலைகனவின் நினைவுவர

கண்கள் நிறைந்தது
செயற்கையான இந்தவாழ்வில்
செய்யபோவது என்ன

முப்பது வருடம்கழித்து

முன்வாழ்வை திரும்பிபார்த்தால்
பணம்பகட்டை தவிர்த்து
பார்க்க என்னஇருக்கிறது

காலை கண்டகனவு

கண்டிப்பாய் பலிக்குமென
பாட்டிஒருமுறை சொன்னநினைவு
பலிக்குமா என்கனவு!!!

மறுபடியும் அலாரம்திருப்பி

மற்றொரு இயந்திரநாளுக்கு
ஆயாசம் ஆட்கொள்ள
ஆயுத்தமாகிறேன் நான்!!!

கண்மூடி உறக்கம்தேடி

கனவு மறுபடியும்
கனவாகவேனும் வரணும்என
கடவுளை வேண்டியே!!

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்