மே தின வாழ்த்து கவிதைகள்

நாற்றுநடும் பெண்களுக்கு
நீர்மோர் தூக்கில்சேர்த்து
எட்டி நடைபோட்டேன்
என்னதாகமோ அவர்களுக்கென

ஆலமர தொட்டில்குழந்தை

அழகாய் சிணுங்கிஅழைக்க
"அலமேலுபுள்ளஅழுது" என்றுவிட்டு
அங்கிருந்த திட்டில்அமர்ந்தேன்

வயல் அழகா

வனிதையர் நடும்அழகா
வாய்கால் நீர்அழகா
வாய்சிவந்த கிளிஅழகா

ஒன்றைஒன்று போட்டிபோட்டு

ஒன்றாய் அழகைஅள்ளிவழங்கி
சொர்க்கத்தில் எனைஇருத்தி
சொக்கவைத்த தருணத்தில்.....

அலார சத்தத்தில்

அலறி எழுந்தேன்நான்!!!

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்