மே தின வாழ்த்து கவிதைகள்


பள்ளிக்கூடம் சென்றுவிட்ட
பிள்ளைகளின் வரவுக்காய்
திண்ணையில் காத்துக்கிடக்கும்
தினுசுக்கொன்றாய் விளையாட்டுச்சாமான்

தாழ்வார தூணில்சாய்ந்து

புழக்கடை தோட்டக்கீரையை
ஆய்ந்து கொண்டிருந்தேன்
ஏகாந்த அமைதியில்

ஆடிகாத்தின் பல்லவிக்கு

அழகிய பக்கவாத்தியமாய்
ரேழியில் இருந்தஊஞ்சல்
ராகம் இசைத்தது

கெட்டிலில் இருந்தபசு

கெதியாய் சுருதிசேர்த்து
அம்மா என்றழைத்து
ஆகிவிட்டது நண்பகல்என்றது

எப்படித்தான் தெரியுமோ

எங்கள் லட்சுமிக்கு(பசு)
கீரையை ஆய்ந்தமிச்சத்தை
கேட்கஅழைக்கிறது பாருங்க

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்