திருமண {கல்யாண} வாழ்த்து கவிதைகள்





சொர்க்கம் மண்ணில் கொண்டு
சொந்தங்களே நீவீர் வாழ்க!

பெற்றோர் உற்றோர் சுற்றம்
போற்றும் வண்ணம் வாழ்க!
இங்கிருந்து கொண்டே
வாழ்த்துகின்றேன் வாழ்க!

மணமகளும் மணமகனும் என்றும்..
இணைந்தே வாழ்க! இல்லறத்தை
இ(ணைந்)னிதே வெல்க!!!

திருமண {கல்யாண} வாழ்த்து கவிதைகள்

கண்களாலே காதல் பேசி

வார்த்தையாலே வர்ணம் பூசி

பாசம் என்னும் கவிதையெழுதி......

நேசத்தோடு வாழனும் நண்பா .....


வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்

வானம் உள்ளவரை வாழ்க என்றும்

வாழ்க வாழ்கவே வானம்

வாழும் வரை வாழ்கவே


எங்கள் நெஞ்சில் வாழும் நண்பா

வானம் போல வாழனும் நண்பா

நீயும்... (மணமகளும் மணமகனும்) கூட சேர

இன்பம் வந்து உங்களை சூழ...

வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்

காதலர் தின வாழ்த்து கவிதைகள்

கடற்கரைக் காணும் போதும்,

கைக்கோர்த்த காதலர்கள்

கடக்கும் போதும்,

காதலர் தினப் பரிசுகளை

தோழி வரிசைப்படுத்தும்போதும்,

முள்ளென முளைத்து நிற்கும்

காதலர் தினந்தன்று

நானும் என் காதலும்

தனிமையாய்-இந்த

தனிமையை என்ன செய்ய??

காதலர் தின வாழ்த்து கவிதைகள்

இந்தக் காதலர் தினத்திலாவது

தந்துவிடுவாய்

என ஏக்கத்துடன் நான்...

பிரிவிற்கு பின்னும்

உன்னுடையதாகவே இருக்கும்

என்னிதயம்...

காதலர் தின வாழ்த்து கவிதைகள்

உன்னுடன் நான் கழித்த

நொடிகளைத்தான்

உருக்கி வார்த்து

உலகம் கொண்டாடுகிறது

காதலர் தினமென...

காதலர் தின வாழ்த்து கவிதைகள்

வாழ்த்துமடல்களில்லை,
வந்து குவியும் பரிசுகளில்லை,
நான் அங்கும், நீ இங்குமில்லை,
எல்லா விடுமுறை நாட்களின்
மதியப் பொழுதின்
வெறுமைப் போலவே
கழிகிறது
இந்த காதலர் தினமும்...

காதலர் தின வாழ்த்து கவிதைகள்

உன் தொலைப்பேசி

முத்தங்களுக்கெல்லாம்

மௌனமே காக்கிறேன்

பரிசுகளாக திருப்பித்தர

காதலர் தினத்தை

எதிர்பார்த்து...

காதலர் தின வாழ்த்து கவிதைகள்

நிறைய நீ;

கொஞ்சம் நானென

இன்னும் வாழ்கின்றன

காதலர் தினங்கள்..

பிறந்தநாள் வாழ்த்து கவிதை


உன் பிறப்பில் தான்

கண்டுகொண்டேன்…

கவிதைக்கும்

உயிருண்டென!

திருமண {கல்யாண} வாழ்த்து கவிதைகள்



திருமணங்கள் சொர்க்கத்தில்

நிச்சயிக்கப்படுகின்றனவாம்......

இவர்களின்


நிச்சயிக்கப்பட்டுவிட்ட

சொர்க்கத்திற்கு,

திருமணநாள் நல்வாழ்த்துகள்...

திருமண {கல்யாண} வாழ்த்து கவிதைகள்

அன்பின் நண்பர்களே,

இதயத்தால் இணைந்திட்ட

இவர்களின்

இல்லறப் பாதையெங்கும்

உங்களின் வாழ்த்துக்களால்

தோரணம் கட்டிட

விரும்பி அழைக்கிறோம்!

திருமண {கல்யாண} வாழ்த்துக்கள்

இதுநாள்காறும்
பூமியாய் நின்று
நிலவை ரசித்திருந்தவன்;
நாளைமுதல் நிலவின் கைப்பிடித்து
இராட்டிணம் சுற்றப் போகிறான்
திருமண வானில்!

பிறந்தநாள் வாழ்த்து கவிதை



உன் பிறப்பு

உன் தாய்க்குத்

தாய்மையையும்,

எனக்கு

வாழ்வையும்

தந்தது

என் காதலியின் பிறந்தநாள் வாழ்த்து கவிதை

உன் பிறந்த நாளன்று

உன்னை

வாழ்த்துவதா?

நீ பிறந்த நாளை

வாழ்த்துவதா?

ஒவ்வொரு

பிறந்த நாளிலும்

வயதோடு, அழகையும்

ஏற்றிக் கொள்கிறாய்!

பிறந்தநாள் வாழ்த்து கவிதை

நீ பிறந்த

பிறகுதான்

உன் அப்பாவுக்கே

பெயர் வைத்தார்களா?

அழகப்பன் என்று!

என் காதலியின் பிறந்தநாள்

தன்

சாதனைப் பட்டியலில்
உன் பிறப்பை

முதன்மையாய்க்
குறித்து வைத்திருப்பான்

பிரம்மன்!

என் காதலியின் பிறந்தநாள்


கால எந்திரம்

கிடைத்தால்

நீ பிறந்தபொழுது,
நான் என்ன

செய்து கொண்டிருந்தேன்?
எனப் பார்க்க ஆசை!

பிறந்தநாள் வாழ்த்து கவிதை



மழைக் காலம்,

கார்காலமெல்லாம்,
எந்த மாதமென்று

எனக்குத் தெரியாது…
நீ பிறந்த மாதம்

அழகுக்காலம்!*

பிறந்தநாள் வாழ்த்து கவிதை

உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க்

கொண்டாட
தேவதைகளே

தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?

என் காதலியின் பிறந்தநாள் வாழ்த்து கவிதை




உன் பெயரில் நடக்கும்
பிறந்தநாள்

அர்ச்சனையை ஏற்றுக்கொள்ள
தவம் கிடக்கின்றன…
எல்லாத் தெய்வங்களும்!


பிறக்கும்போது

3 கிலோ இருந்தாயாம்.
பத்து மாதமாய்

உன் அம்மாவால்,
3 கிலோ அழகுதான்

சேர்க்க முடிந்ததா?

பிறந்தநாள் வாழ்த்து கவிதை


நீ பிறந்த

மருத்துவஅறைக்கு

ராசிகூடிவிட்டதாம்.
அழகுக்குழந்தை பிறக்க

அங்குதான்
பிரசவம்

பார்க்கவேண்டுமென
அடம்பிடிக்கிறார்களாம்

கர்ப்பிணி பெண்கள்.

பிறந்தநாள் வாழ்த்து கவிதை


ஒருநாளுக்காக

ஓராண்டு காத்திருக்க

முடியவில்லையடி.
உன் பிறந்தநாளை

மாதம்தோறும்…
இல்லையில்லை,

நீ பிறந்தகிழமையென்று
வாரம் தோறும்

கொண்டாடுவோமா?

காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை


உன் பிறந்தநாளன்று

முதலாளாய் 12 மணிக்கே
வாழ்த்தவில்லையென

சண்டைக்கு வருகிறாய்.
நீ பிறந்த நேரத்தில்

வாழ்த்துவதற்காய்

நான் காத்திருந்ததை
எப்படி சொல்லிப் புரிய வைப்பது?

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பொங்கல் தினத்துடன்
எமது உள்ளங்களில்
நல்ல சிந்தனைகள் உருவாகட்டும்.
அதனூடாக நல்ல சூழல்
பிறக்க வழி வகுக்கும்.
தை பிறந்தால் வழி
இப்படியாவது பிறக்கட்டும்.
மாண்ட வீரர் கனவு பலிக்கும்,
மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பொங்கல் கவிதை

பழையன கழிதலும்
புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த
நல்லதோர் முதுமொழியாம்
தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில்
விடியும் வேளை நாமெழுந்து நீராடி
நற்காலைப் பொழுதினிலே
பொங்கல் விழா தனிப்பெருந்
திருவிழாக்கோலம் பூணுகிறது.
தைப்பொங்கல் திருவிழா என்பது
ஒரு சமய விழா அல்ல!
தமிழரின் பண்பாட்டு விழா!
தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாடும் நாள்!
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தமிழர் திருநாள் வாழ்த்து கவிதை

தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
என் இதயம் கனிந்த
தமிழர் திருநாள் வாழ்த்துகள்...!

புத்தாண்டு வாழ்த்து கவிதை

நாளைய வாழ்க்கை என்னும்
புது பானையில்....
புதிய எண்ணங்கள்
புதிய நண்பர்கள்
புதிய முயற்சிகள்
புதிய நம்பிக்கைகள்
புதிய திட்டங்களை சேர்த்து

சோர்விலா செயல்கள்
என்னும் தீயை மூட்டி

பொங்கட்டும் புது வாழ்வு ...!

புத்தாண்டு வாழ்த்து கவிதை

உலகெங்கிலும் உள்ள தமிழ் நண்பர்களுக்கு
உங்கள் வாழ்வில் துயர்கள் நீங்கி
உற்காகத்துடனும் உல்லாசத்துடனும்
உன்னத வாழ்வு வாழ
உளம் கனிந்த எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

புது வருட வாழ்த்து கவிதை


கனவுகள் பூத்த எணணங்களை
கால தூரிகையோடு
வண்ணங்கள் பூசிவிட‌
பருவத்தளிர் மங்கையைப்போலே
புதிதாய் பூத்து நிற்கிறது
புது வருடம்...!

பிறந்தநாள் வாழ்த்து கவிதை

உன் பிறந்த நாளை பார்த்து
மற்ற நாட்களெல்லாம்
பொறாமை படுகின்றன
உன் பிறந்த நாளில்
பிறந்திருக்கலாம் என்று...

பிறந்தநாள் வாழ்த்து கவிதை

உன் பிறந்த நாள்
பரிசு என்ன வேண்டும்
என்று கேட்டதற்கு
என்ன பரிசாக இருந்தாலும்
என் பிறந்த நாளில் பிறந்ததாய்
இருக்க வேண்டும்
என்றாய் ...

எனக்கு தெரிந்து
என் கவிதை தவிர வேறொன்றும்
இன்று ஜனனமாகவில்லை...
பல்லாண்டு வாழ்க ...
நீயும் உன் உணர்வுகளும்...


திருமண [கல்யாண] நாள் வாழ்த்து கவிதை


பூவினால் காய்கள் தோன்றும்!
புலவனால் கவிதை தோன்றும்!
நாவினால் சொற்கள் தோன்றும்!
காதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம்
இனிதாய் கூவுங்கள் மணமக்களை வாழ்த்தியிங்கு

கல கல பேச்சு உண்டு!
களங்கமில்லா தோற்றமுண்டு! -தன்
பல கலைத் திறனினாலே -மணமக்கள்

நலிவடையா விளை நிலம் போலானார்!

கன்னத்தில் பொலிவு தோன்றும்
கரும்பெனச் சிரிக்கும்போது! -எல்லோரது
எண்ணங்களிலும் இனிமை தோன்றும்
வாழ்த்துவோம் மணமக்களை -இன்னுமோர்
நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று…

ஈழத்தின் தைப் பொங்கல் கவிதை

அதிகாலை வேளையில் கதிரவன் வருகை கண்டு
இல்லத்தின் முற்றத்தில் வண்ணக்கோலமிட்டு

சாணம் கொண்டு அறுகம்புல்லில் பிள்ளையாரும் பிடித்து
கிழக்கே பார்க்க குத்துவிளக்கும் ஏற்றி

வெத்திலையும் பாக்கும் சந்தனமும் ஊதிபக்தியும்,
சாம்பிராணியும் ஊரெங்கும் மணக்க
கரும்பும் வாழைப்பழங்களும்
இனிப்பு பலகாரமும் ஒரு பககம் இருக்க

மூன்று கல்வைத்து அதில் விறகு வைத்து கற்பூரம் கொண்டு
தீ மூட்டி இறை வழிபாட்டுடன் புதுப்பானை அதிலிட்டு

அரிசியை அள்ளி ஆதவனை வணங்கியே
அப்பாவைத்தொடர்ந்து
அனைவரும் பானையிலிட்டு
தேனும் சர்க்கரையும் பாலும் சேர்த்து

தித்திக்கும் பொங்கல் செய்து
ஞாயிறுக்குப் படைத்து
பட்டாசுகள் விண்ணைப்பிளக்கும்
ஓசையுடன் வெடிவெடித்து

அயலவர் உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் என்று கூடி
கொடுத்துப்பரிமாறி ஒன்றாயிருந்து
உழவருக்கு நன்றி சொல்லி

மகிழ்ச்சிவெள்ளத்தில் மகிழ்ந்த அத்திருநாள்.

நினைக்கையில் நெஞ்சம் கொஞ்சம் வேதனை தருகிறது
நிலையற்ற வாழ்வால் நித்தமும் பொங்கல் முற்றத்தில் நிலையாகின்றது..
தனிஈழத்தின் தரணியில் அலையென மக்கள் பொங்கும் நிலை.

திருமண வாழ்த்து கவிதை


அன்பை அறிவை அளவின்றி அளித்து
அகிலம் போற்ற வாழ்
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.

இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
நல்லறம் போற்ற செய்
ஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து
வாகை சூடி வெல்


உண்மை வன்மையாய் காத்துநின் றெவர்க்கும்
வாய்மை வெல்லுமென் றுணர்
ஊரனைத்து முன்புகழ் நாட்டி பேரனைத்தும்
உனதாய் விளங்க நில்

எங்கு மெதிலும் சிறப்பாய் சிறந்து
ஓங்கி நிறுத்துநுன் திறமை.
ஏற்றம் மாற்றம் எதிலெனினும் ஏமாற்றம்
அகற்றி வாகை சூழ்


ஐயமெனும் அரியநோய் எங்குமெதிலும் எவர்க்கும்
மையம் கொளா செய்.

ஒற்றுமை கற்று வேற்றுமை அற்று
வற்றாமை செய்உன் மனம்.
ஓய்விலா உழைப்பை என்றும் உரிதாய்
நோயிலா வாழ்க்கை கொள்.


ஒளவாறே அனைத்தும் சிறப்பாய் மலர்ந்து
சீரிய கொள்கை வெல்.
அஃதே அமைந்திட வேண்டும்

நிலவன்


அமெரிக்கப் பொங்கல் கவிதை

##########paste mater###############

கலியுகப் பொங்கல் கவிதை

கணினி நிறுவனங்களின்
வாசல்களில்
மின் விளக்கு அடுப்பில்
தெர்மாகோல் பொங்கல்
'Happy Pongal" வாசகங்களுடன்.

பொங்கலின் பொருள் தெரியா
கழுத்துப் பட்டை
மென் பொறியாளர்களுக்கு
மின்னஞ்சல் உதடுகள்
காதலியரிடமிருந்து.

தமிழன்
'எப்போது பொங்குவான்
தன் நிலைகண்டு'
பட்டிமன்றங்கள் பொதிகையில்.


ரங்கநாதன் தெருக்களிலும்
பிட்சா கார்னர்களிலும்
நகைக்கடைகளிலும்
கொடிகட்டிப் பறக்கும்
விடுமுறை வருமானம்


வலிகளின் வரவால்
எலிகளைத் தின்று
வளைகளில் வாடும்
விவசாயத் தோழன் மட்டும்
கடன் வாங்கிப் பொங்குகிறான்
பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.UERYC6778SZ5
- கவிஞர் சேவியர்

தை பொங்கலே

மனங்கள் பொங்கி வழியும் நாளில் ...............
பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா?
சிறகில் தீ பிடித்தாலும் ...
அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்!
வருக தை பொங்கலே...!!

பொங்கல் திருவிழா கவிதை

தைப்பெண்ணே
வருக வருக
உன் வரவால் ...எம்
மக்கள் மனம்..
மகிழட்டும்..
துவண்டு கிடக்கும்
எம் ...சம்முதாயம்..
துணிந்து எழட்டும்
வாடீக் கிடக்கும்..
வயல் வெளியெங்கும்..
வளங்கள்...பெருகட்டும்....
பொங்கும் மங்களம்
எங்கும் பொழிய
பொங்கலே நீ...
பொங்கி....வழிக.....
நிலாமுற்றத்து உறவுகள் அனைவர்க்கும்
எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்


தைத்திங்கள் தமிழ்ப்புத்தாண்டு கவிதை

தைத்திங்கள் தலைநாள்
தமிழுழவர் ஒளிநாள்
தமிழ்மக்கள் பெருநாள்
தமிழ்ப்புத்தாண்டுத் திருநாள்

தென்திசை ஓய்ந்த கதிரவன்
வெற்றித் திலகம்போல்
வடதிசை நகரும் நன்னாள்

நெல்லுக்கும் உழவர்க்கும்
மடிதரும் நிலம்
உயிர்தரும் நீர்
மூச்சுதரும் காற்று
ஒளிதரும் சூரியன்
மழைதரும் ஆகாயம் என்ற
ஐம்பூதங்களுக்கும்
நன்றியோடு விழா எடுக்கும்
பொன்னாள்

வரப்புகளில் விளையாடி
வயலுக்குள் வாழ்ந்து
வளர்ந்த நெற்கதிர்களை
வெண்மணி அரிசியாக்கி
புத்தம்புதுப் பானையில்
பாலும் சர்க்கரையும்
பாகும் பருப்புமிட்டுப் பொங்கி
மஞ்சளும் இஞ்சியும்
கரும்பும் கற்கண்டும் கூட்டி
நிலத்தை முத்தமிட்டுச்
சூரியனை வாழ்த்தி
உழவர்தம் உயிர் நெகிழும்
பொங்கல்நாள்

தைத் திங்கள்
தமிழ்ப் புத்தாண்டின்
தித்திப்பு வாழ்த்துக்கள்!
அன்புடன் புகாரி

பொங்கல் திருவிழா வாழ்த்து கவிதை

பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது

கரும்பைக் கைபிடிக்க
கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
குமரியிதழ் தேன்வடிக்க

வயலில் வாய்க்காலில்
ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
பாடிவரும் பொங்கலிது


அன்னம் கொடுப்பவளின்

அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
நிலம்வணங்கும் பொங்கலிது


பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கலோ பொங்கல்
அன்புடன் புகாரி

பொங்கல் வாழ்த்து கவிதை

மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது
பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்து

தை பிறந்தால் வளி பிறக்கும்
தைத்திங்களில் பொங்கல் பொங்கி
எத்திக்கிலும் மங்கலம் பெருக
மங்களகரமான இந்நாளை-மனதினில்
நினைவு கூர்ந்து கவிதை தந்த தமிழுக்கு
வாழ்த்துக்களும்
பொங்கல் வாழ்த்துக்களும் கூறி
தமிழ் புத்தாண்டை கொண்டாடுவோம்...

பொங்கல் வாழ்த்து



* * * பொங்கல் வாழ்த்து * * *


மங்கல அணியும் பொட்டும்
. . மரகத மணிபோற் கண்ணும்
குங்கும நுதலும் தண்டைக்
. . குலுங்கிடும் காலும் மஞ்சள்
தங்கிய முகமும் வண்ணத்
. . தடம்பணைத் தோளும் கொண்ட
மங்கையர் கைபார்த் துண்ண
. . மலர்கவே பொங்கல் நன்னாள்.


பூச்சிறு மழலை மேனி
. . புத்துடை நகைகொண் டாட
ஆச்சியர் துணைவர் சேர
. . ஆனந்தத் தமிழ்ப்பண் பாட
பாற்சுவை வழங்குநன் னாள்
. . பழந்தமிழ் வளர்த்த பொன் னாள்
போற்சுவை நாளொன் றில்லை
. . பொலிகவே இன்பப் பொங்கல்.


தமிழ்ப் பொங்கல்



கரும்புக்கை நீட்டுகின்ற தோட்டம், எங்கள்
கற்கண்டுச் செந்தமிழை நினைவுறுத்தும்
விரிந்தஇலை பரப்புகின்ற வாழை, பொங்கல்
விருந்துக்கு வரச்சொல்லி அழைப்பு வைக்கும்
வரிசைபெறும் நெற்குவியல் பொன் மலைபோல்
வளம்காட்டி வறுமைக்கு விடை கொடுக்கும்
தரிசுநிலம் திருத்திவந்த பயன் அனைத்தும்
தைத்திங்கள் தரும்பொங்கல் எடுத்துரைக்கும்
நன்செய்யும் புன்செய்யும் தழைத்து நிற்கும்
நல்லழகில் தோய்ந்தவர்க்கு நலிவே இல்லை
மண்செய்யும் விந்தைகளின் விளக்கம் ஆகும்
மருதத்தின் மண்புசொல்ல வார்த்தை யில்லை
புண்செய்து போட்டநிலம் நம்மைப் பார்த்துப்
'புசி'என்று புகன்றிடவே போகும் தொல்லை !
பண்செய்த தமிழாலே உழவைப் போற்றிப்
பாடாமல் நமக்கிங்கே என்ன வேலை ?
***
இக்பால்

வருக தை பொங்கலே


தை பொங்கலே
மனங்கள் பொங்கி வழியும் நாளில் ...............
பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா?
சிறகில் தீ பிடித்தாலும் ...
அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்!
வருக தை பொங்கலே...!!

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

தைப்பெண்ணே
வருக வருக
உன் வரவால் ...எம்
மக்கள் மனம்..
மகிழட்டும்..
துவண்டு கிடக்கும்
எம் ...சம்முதாயம்..
துணிந்து எழட்டும்
வாடீக் கிடக்கும்..
வயல் வெளியெங்கும்..
வளங்கள்...பெருகட்டும்....
பொங்கும் மங்களம்
எங்கும் பொழிய
பொங்கலே நீ...
பொங்கி....வழிக.....
நிலாமுற்றத்து உறவுகள் அனைவர்க்கும்
எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் திருவிழா..

வங்கக் கடல் தமிழன் எங்கு குடி இருப்பினும்
சங்கத் தமிழ் சிறப்பை மறந்து வாழ்வனோ

பொங்கல் திருநாளினை போற்றி மகிழ்ந்திட
தங்க நிறச் சூரியத் தலைவனை முந்தி எழுந்து
பொங்கிடப் புதுப் பானை அலங்கரித்து..

செங்கரும்புப் பந்தல் தொங்க மாவிலை தோரணம் முடிக்க..

மங்களம் நிறைந்த மனையாள் நீராடிப் புது பட்டுடுத்தி
தங்கமக்கள் சிறுமழழை சூழ சேவலும் மயிலும் கூவ
வெங்கலமாய் பொங்கி வரும் கதிரவனை வணங்கி
செங்கீற்று விள்க்கேற்றி கற்பூற சுடரேற்றி விறகடுக்கி
தங்கமென சிவந்த தணலடுபில் வைத்த் புதுப்பானை நீரூற்றி

அங்கமழ பாடுபட்டு உழுவார் நிலம் புலந்த் புத்தரிசி
செங்கமலச் சோலை சேகரித்த தேனோடு பாகும் பருப்பும்
எங்கள் குலமாத பொழிந்த பசும் பாலும் நெய்யுமிட்டு
பொங்கலோ பொங்கல் எனக் குரவியிட்டு வரப்புயர வாழ்வளித்த
மங்காத செல்வம் இயற்கை அண்ணைக்கு நன்றிப் பெருவிழா

சங்க தமிழினதின் பெருவிழா பொங்கல் திருவிழா..

மணிவண்ணன்

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!


தைப்பாவாய் தைப்பாவாய்
வாசலில் வந்தாள் தமிழ்ப்பாவாய்
தீபங்கள் ஏந்திய கைப்பாவாய்
தென்றலென வந்தாள் தேன்பாவாய்

மார்கழிப் பெண்ணுக்கு இளம்பாவாய்
மாதங்கட்கெல்லாம் தலைப்பாவாய்
தேரினில் ஏறிய தென்பாவாய்
ஊர்வலம் வாராய் ஒளிப்பாவாய்

சூரியதேவன் சுடர்ப்பாவாய்
சுந்தரவதனச் செம்பாவாய்
ஏருழவர் கை உழைப்பாவாய்
ஏழை எளியவர்க்கு இன் பாவாய்

அன்பென்று கொட்டு முரசாவாய்
அனைவர்க்கும் வாழ்வு என்றறைவாய்
இன்புறப் புல்லாங் குழலிசைப்பாய்
இனிய தமிழ்க்காதல் யாழிசைப்பாய்

பொன் யுக வாசல் திறந்ததென்று
கொம்பெடுத்தூதடி எம்பாவாய்
சங்கு முழங்கடி எம்பாவாய்
சங்கடம் தீர்ந்திட கைகோர்ப்பாய்

கூத்துப் போடடி பெண்பாவாய்
பறைகொட்டி முழங்கடி எம்பாவாய்
தக்கத் திமிதிமி தக்கத் திமியென
நர்த்தனம் ஆடடி பொற்பாவாய்


போற்றி பாடடி பொன்பாவாய்
புதுயுகத்தின் பொங்கல் எம்பாவாய்
ஆற்றுகலைகள் அத்தனையும் பொங்க
ஆனந்தக் கும்மி அடி பாவாய்

சு.வில்வரத்தினம்

பொங்கல் திருநாள்




புதுப்பொலிவும், பொன்விடியலும்
தந்து நற்பொழுதுபுலரும்
என்ற நம்பிக்கையுடன்
மலர்ந்துள்ள சித்திரை
உலகத் தமிழர்களின்
உள்ளம் எல்லாம் குளிரும் வகையில்
தமிழ் ஈழம் பிறக்கவும்,
தமிழர் தாகம் தணியவும்,
ஈழத்தமிழர் இன்னல் தீரவும்,
தாய்த் தமிழகத்தின் குமுறல் நீங்கவும் வழிவகுக்கட்டும்

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்


அனைத்து தமிழர்களும்
சிறந்து வாழ
தமிழர் திருநாளாம்
விவசாயிகளின் நன்றித் திருநாளான
பொங்கல் நாளில்..
உங்களுக்கு எனது
பொங்கல் வாழ்த்துகள்.
உங்கள் நண்பர்களுக்கும்
உறவினர்களுக்கும்
மகிழ்ச்சியும்
அன்பும் மற்றும் எல்லா வளங்களும்
பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.